
ராஜஸ்தான் அணியின் கேப்டன் அறிவிப்பு
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் (22)தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் திகதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.