வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் முறையான திட்டம் உள்ளது

வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் முறையான திட்டம் உள்ளது

வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தாலும் வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் முறையான திட்டமொன்று காணப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுச்சட்டுச் சட்ட மூலம் தொடர்பாக இன்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது  பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய நிதி பிரதி அமைச்சர்;

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாட்கள் சிலவற்றை நாம் அண்மித்துள்ளோம். வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் ஒன்று உள்ளது.

எதிர்க்கட்சியின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தாமையினால் இந்த நாடு வங்குரோத்தடைந்தது. கடந்த காலங்களில் வர்த்தக வீதங்களுக்குக் கடன் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாட்டிற்கு ஏற்ற முறையொன்றிற்கு கடனைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் மதிப்பீடுகளுக்கு அமைவான எஸ் வரி முறை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. அது நீண்ட காலங்களாக இருந்து வந்த திட்டத்தின் பிரதிபலனாகும். வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் போன்றவர்களுக்கு எவ்வித அநியாயங்களும் ஏற்படாதவாறு இதற்காக அவசியமான டிஜிட்டல் முறை ஒன்றை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் தான் இந்த எஸ் வரி முறையை இல்லாமலாக்கி இந்தப் புதிய  திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்திட்டம் உரிய தினத்தில் செயற்படுத்துவதற்காக அவசியமான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)