
பதுளையில் இ. தொ. கா வேட்புமனு தாக்கல்
உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை பதுளை மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (20) தாக்கல் செய்யப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹாலி-எல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, பண்டாரவளை, எல்ல, வெலிமடை, ஊவா பரனகம ஆகிய இடங்களில் சேவல் சின்னத்திலும், பதுளை பசறை, ஹப்புத்தளை, ஹல்துமுல்லை ஆகிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து டெலிபோன் சின்னத்திலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.