தரமற்ற க்ரீம்களை அதிக விலைகளில் விற்பனை செய்த பியூமி ஹன்சமாலி

தரமற்ற க்ரீம்களை அதிக விலைகளில் விற்பனை செய்த பியூமி ஹன்சமாலி

அழகுக்கலை நிபுணர் பியூமி ஹன்சமாலி, தரம் குறைந்த ,சருமத்தை ஒளிரச் செய்யும் அழகுசாதனப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி அவற்றை அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செயதுள்ளமை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில், தெரியவந்துள்ளது.

அவரது இரண்டு விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல அழகுக்கலை நிபுணர் பியூமி ஹன்சமாலி தமது விற்பனை நிலையத்தினூடாக இந்த தரம் குறைந்த கிரீம்களை ரூ. 2,000, 3,000, 5,000 மற்றும் 6,000 ரூபாய் விலைகளில் விற்பனை செயதுள்ளதாகவும் பின்னர்
அதே உற்பத்திகளை மீண்டும் வேறுவகையில் பொதிசெய்து தனது ஏனைய விற்பனை நிலையங்கள் ஊடாக
இந்த மலிவான அழகுசாதனப் பொருட்களை இருபத்தெட்டாயிரம் முதல் முப்பத்து மூவாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில், தெரியவந்துள்ளது.

Piumi Hansamali இந்த வியாபார நடவடிக்கைகளை வெவ்வேறு நான்கு வணிகப் பெயர்களில் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் முக அழகு கிரீம்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்த்துள்ளார்.

இதன்மூலம் Piumi Hansamali ஒரு நாளைக்கு ரூ. 1 மில்லியன் முதல் ரூ. 1.5 மில்லியன் வரை பணம் சம்பாதித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வியாபாரத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு சொகுசு ஜீப்பையும், ரூ. 2.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு காரையும் வாங்கியுள்ளார். மேலும் இவர் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், இந்த கிரீம்களை விற்பனை செய்வதன் மூலமாக அவர் பணம் சம்பாதித்தாரா அல்லது சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தார் என்பதை கண்டறியும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி பிரபல சிங்கள நாளிதழில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )