ஐ.பி.எல் 2025 : முதல் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐ.பி.எல் 2025 : முதல் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.

இதில் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுனில் நரைன் மற்றும்
குயின்டன் டி காக் களமிறங்கினர்

குயின்டன் டி காக் 4 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அணி தலைவர் ரஹானே களமிறங்கினர்.

சுனில் நரைன் மற்றும் ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடி 103 ஓட்டங்களை பதிவுசெய்தது.

அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 26 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்று ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ரஹானே அரைசதம் கடந்து 56 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் குருணால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அதற்கமைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பதிவுசெய்தது

தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூரு அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பிலிப் சால்ட் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 56 ஓட்டங்களை எடுத்து வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

இருப்பினும் மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி இறுதிவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அணி தலைவர் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)