போதைப்பொருளுடன் ஒருவர் கைது

 போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை பாலத்திற்கு அருகில் ஹசீச் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பாணந்துறை பாலத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்தபோது, ​​ஒரு பொலித்தீன் பையுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 கிலோகிராம் 870 கிராம் ஹசீச் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி, சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )