உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் எது தெரியுமா ?

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் எது தெரியுமா ?

உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். சிவன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் ரகசியத்தையும், அதன் பொருளையும் பார்வதி தேவியிடம் கூறியது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

image

இந்த கோவிலில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த மரம் 3000 ஆண்டு பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த மரத்தடியிலேதான் சிவன் சுயம்பு லிங்கமாக தோன்றினார்.

image

இந்த கோயிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்கள் மட்டும்தான் உள்ளன. எனவே நவக்கிரக வழிபாடு அறியப்படாத காலத்திற்கு முன்பே தோன்றிய கோவில் இது என்று அறியப்படுகிறது.

இந்த கோவிலின் பழமையை குறிக்கும் விதமாக “மண் தோன்றியதற்கு முன்பே மங்கை தோன்றியது” என்ற பழமொழி இப்பகுதியில் வழக்கில் இருந்து வருகிறது. மேலும் இந்த கோவில் ‘ராமாயண காலத்திற்கும் முந்தையது’ என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில்தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )