
கொட்டாஞ்சேனையில் இருபெண்களுடன் காரை கடத்த முற்பட்டவர் தப்பியோட்டம்.
கொட்டாஞ்சேனையில் என்ஜின் அணைக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த காரை
இருபெண்களுடன் கடத்திச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார் .
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தற்போது மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.
கொட்டாஞ்சேனை வாசல வீதியில் நேற்றிரவு காரின் எஞ்சினை நிறுத்தாமல் உணவகம் ஒன்றிற்கு கணவன் சென்றபோது , காரில் இருந்த கர்பிணி மனைவி மற்றும் தாயுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது .
இதன் போது, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கு விசாரணை ஒன்றிற்காக கெப் வாகனத்தில் வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர், கார் திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து குறித்த காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சைகை காட்டினர்.
எனினும் பொலிஸாரின் உத்தரவை மீறி சந்தேக நபர் காரை ஓட்டிச் சென்ற போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு முறை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டன.ர்.
இதன்போது கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் புகையிரத பாதைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார் .
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.