குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். “குபேரா” திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படமாகும்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதல் பாடலான போய்வா நண்பா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் இறந்தவருக்காக பாடி ஆடும் காட்சி அமைந்துள்ளது.

இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் பாடியுள்ளார். பாடலில் தனுஷின் ஆட்டம் அட்டகாசமாக அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )