
தங்கத்தின் விலையில் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை எட்டியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அதன் பிரதிபலிப்பாக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி நேற்று நண்பகல் தங்கத்தின் விலை ரூ. 2000ஆல் அதிகரித்ததாகவும், நேற்றைய தினம் இரு தடவைகள் தங்கத்தின் விலை அதிகரித்ததாகவும் அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி கொழும்பு செட்டியார் தெருவில் நேற்று நண்பகல் தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ரூ.2 இலட்சத்து 79 ஆயிரமாக விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முறையே, 22 கரட் தங்கம் ரூ. 2 இலட்சத்து 56 ஆயிரம் ஆகவும் 18 கரட் தங்கம் ரூ. 2 இலட்சத்து 10 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 34 ஆயிரத்து 875 ஆகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 32 ஆயிரம் ஆகவும் 18 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 26 ஆயிரத்து 250 ஆகவும் விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

