பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் உச்சபட்சமாக தண்டிக்கப்படுவர்.

பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் உச்சபட்சமாக தண்டிக்கப்படுவர்.

உயர்கல்வி தொழிற் கல்வி அமைச்சு அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் சட்டத்தின் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என உயர்கல்வி தொழிற் கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது .

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனின் திடீர் மரணம் தொடர்பாக இன்று அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாணவன் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் ,
நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அடுத்தநாள் 28 ஆம் தேதி குறித்த மாணவன் கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் வந்துள்ளார்

பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த மாணவனுக்கு முகங்கொடுக்க நேரிட்ட தாங்க முடியாத அவமானமே தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனது மகனை சித்திரவதை செய்து, உள்ளாடைகளை கழற்றி, அவன் தலையை சுவரில் மோதி, சட்டை ஊசியை கொண்டு உடலில் குத்தி அதன் பிறகு, ஒரு அலுமாரியில் தள்ளிவிட்ட தாக உயிரிழந்த
சரித் தில்ஷானின் தாயார் கணீர் மல்க கூறியுள்ளார்

இதனால் அவமானத்தோடும் வேதனையோடும் இருந்த தன மகன்
மன அழுத்தத்திற்குள்ளாகியதாகவும் இம்முறை வீட்டிற்கு வந்தபோது அவர் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை என்றும் குறித்த தயார் தெரிவித்துள்ளார்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதாக உயிரிழந்த மாணவன் சரித் தில்ஷானின் தந்தை குற்றம் சாட்டிஉள்ளார்

“கடந்த இரண்டு வருடங்களாக, சீனியர் பேட்ஜில் மாணவர்கள் தன மகனுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும் இந்த நிலை எந்த பெற்றோருக்கு வரக் கூடாது என்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி
அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக உயிரிழந்த
மாணவன் சரித் தில்ஷானின் தந்தை தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆலைக்குழுவும் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் என உயர்கல்வி
தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் சமூக ஊடகத் தகவல்கள் குறித்தும் கண்காணித்து வருவதாகவும் ,
விசாரணைகளின் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வெளிப்படுத்தும் வரை, பல்வேறு நபர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி தொழிற் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது .

இந்த திடீர் மரணம் குறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக உயர்கல்வி தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )