சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதம்

மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன .

பகிடி வதையால் மன அழுத்தத்திற்கு உள்ளான
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் தான் தற்கொலைசெயது கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் இது ,

இத்தனை நாட்களாக நான் அனுபவித்த துன்பங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பது எனக்கு மட்டுமே தெரியும் .
நான் பல வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன்
என் வேதனைகளை நான் இதுவரையில் எவரிடமும் கூறியதில்லை
அண்மைய நாட்களில் என் வேதனை மிக அதிகமாகியது
அதை தாங்கி கொள்ள நான் எவ்வளவோ முயற்சி செய்தேன்.
ஆனால் என்னால் முடியவில்லை .
இந்த துன்பங்களிலிருந்து வெளியில் வர முற்சித்தேன் என்னால் முடியவில்லை .
எனது ஆயுள் அவ்வளவு தான் என்று நினைக்கிறேன்
.’

இந்நிலையில் உயிரிழந்த மாணவன் சரித் தில்ஷான்
தனது சக நண்பர் ஒருவருடன் தனக்கு நேர்ந்த துன்பங்களை
whatsapp மூலமாக பகிர்ந்து கொண்டமை தெரியவந்துள்ளதாக பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செயதி வெளியிட்டுள்ளது

பகிடிவதைக்குட்படுத்தும் மாணவர்கள் தன்னை உள்ளாடையுடன் பல்கலைக்கழக தங்குமிடம் முழுவதும் சுற்றிவருமாறு உத்தரவிட்டதாகவும்
அத்துடன் உயர் பிரிவு மாணவர்கள் சிலர் தன்னை பலமுறை அடித்து துப்புறுத்தியதாகவும் whatsapp இல் சரித் தில்ஷான் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது .

சம்பவத்தில் உயிரிழந்த சரித் தில்ஷான் என்ற குறித்த பல்கலைக்கழக மாணவனை ,சில உயர் பிரிவு மாணவர்கள் துன்புறுத்தலுக்கு
ஆளாக்கியதாக, அச்சம் காரணமாகபெயர் குறிப்பிட விரும்பாத
அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

23 வயதுடைய ,சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீட இரண்டாம் வருட மாணவன் சரித் தில்ஷான் ,
கடந்த 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

பகிடிவதையால் ஏற்பட்ட அவமானத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அடுத்தநாள் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் வந்த குடித்த
மாணவன் 29 ஆம் திகதி மாலை தற்கொலை செய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனது மகனை சித்திரவதை செய்து, உள்ளாடைகளை கழற்ற்றுமாறு கூறி , தலையை சுவரில் மோதி, சட்டை ஊசியை கொண்டு உடலில் குத்தி அதன் பிறகு, தன மகனை ஒரு அலுமாரி மீது தள்ளிவிட்டதாக உயிரிழந்த சரித் தில்ஷானின் தாயார் கணீர் மல்க கூறியுள்ளார்

பல கஷடங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து ஆளாக்கிய தன்மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமெனவும்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதாக உயிரிழந்த மாணவன் சரித் தில்ஷானின் தந்தை குற்றம் சாட்டியு ள்ளார்

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடப்பெற்று வருவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உயர்கல்வி தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை இந்த விடயத்தில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )