லக்னோ- ஐதராபாத்  அணிகள் இன்று மோதல்

லக்னோ- ஐதராபாத்  அணிகள் இன்று மோதல்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )