நடிகர் விஷாலின் வாழ்க்கை துணை யார் தெரியுமா ?

நடிகர் விஷாலின் வாழ்க்கை துணை யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார். “எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்”, என்று விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தா வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற இருக்கிறது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொள்கிறார். அதிகாரப்பூர்வமாக விஷால் அவர்களது திருமணத்தை பற்றி இந்த விழாவில் கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )