
வணிக பணிப்பாளர் நாயகமாக அமீனா சாஃபி மோஹின் நியமனம்
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது வெற்றிடமாகவுள்ளது.
அதனால், தற்போது குறித்த திணைக்களத்தின் வணிகப் பணிப்பாளர் நாயகம் பதவி வகித்த சிரேஷ்ட அதிகாரியான அமீனா சாஃபி மோஹின் உடனடியாக அமுலுக்க வரும் வகையில் வணிகப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு முழுநேரப் பதில் கடமையாற்றுவதற்காக நியமிப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
CATEGORIES Sri Lanka

