
72வது உலக அழகி போட்டி ; இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற அனுதி
இந்தியாவின் தெலங்கானாவில் நடைபெற்று வரும் 72வது ‘உலக அழகி போட்டியில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார்.
74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார்.
தற்போது இவர் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தேர்வாகியுள்ளார்.
இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் அனுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

