
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் விடுதலை
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பொலிஸாரால் இன்று (23) கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று (23) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

