நுவரெலியா கண்டி வீதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துபஸ் விபத்து

நுவரெலியா கண்டி வீதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துபஸ் விபத்து

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது வீதியை விட்டு விலகி கவிழ்ந்தததில் நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

குருநாகலிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது .

பஸ் விபத்துக்குள்ளானபோது 54 பேர் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் உட்பட மூன்று ஆண்கள் மற்றும் 20 பெண்கள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்குள்ளான பஸ்ஸில் சுற்றுலா சென்றவர்கள் குருநாகல் கிரிவவுல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )