
இன்று மற்றொரு பஸ் விபத்து – 7 பேர் காயம்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன .
விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் டிப்பர் வாங்கனத்தின்
சாரதி தனமல்வில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

