அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள்

அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள்

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )