
நேற்று இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவங்கள்
கிளிநொச்சி புனரின் , கலவான ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொலை சம்பவங்கள் நேற்று இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
புனரின் தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற கொலைக்கு ,இரண்டு குழுக்களுக்கு இடையேயான ஏற்பட்டிருந்த நீண்ட நாள் பகையே காரணமென கூறப்பட்டுள்ளது .
சம்பவத்தில் புனரின் பகுதி, செம்மங்குனுடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர்.ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இதேவேளை கலவான போலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஹெட்டிகந்தவில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான நாவலகந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்திற்கு காவலாளியாக வேலை செய்து வந்ததுடன் குறித்த நிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்ய கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

