
மீனவர்கள் மறு அறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம் , நாட்டின் சில கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹலாவ முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரகம் மற்றும் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 க்கு வெளியிடப்பட்ட இந்த சிவப்பு எச்சரிக்கை, நாளை அதிகாலை 2.30 மணி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,
மேலும் அந்தப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் எனவும் மேலும் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடல் மற்றும் மீன்பிடி சமூகங்கள் மறு அறிவிப்பு வரும் வரைகுறித்த கடல் பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

