
லிப்ட் இடிந்து விழுந்து இளைஞரொருவர் பலி
மொரட்டுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலின் உள்ளக பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னுயர்த்தி இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்ததாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் , பாணந்துறை, அருக்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ரவிந்து பீரிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
CATEGORIES Sri Lanka

