
கலப்பு திருமணம் ; 40 பேருக்கு மொட்டை அடித்த கிராமம்
ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேருக்கு மொட்டை அடிக்கபட்ட சம்பவம் ஒடிசாவில் பதிவாகியுள்ளது
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குறித்த பெண், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்தத் திருமணம் கிராம மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, குறித்த பெண்ணின் குடும்பத்தை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பெண் வீட்டார் மீண்டும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், சுத்திகரிப்பு சடங்கைச் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரினர். அவர்கள் மறுத்தால், காலவரையற்ற சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கிராம மக்கள் அச்சுறுத்தியும் உள்ளனர்.
கிராம மக்களின் அழுத்தத்தின் காரணமாக, குடும்பத்தினர் உள்ளூர் தெய்வத்தின் முன் சடங்குப்படி மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெற்றது.
மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

