
கொலம்பியாவில் நிலச்சரிவு ; 25 பேர் பலி
கொலம்பியாவில் பிரபல மலை பிரதேசமாக அன்டியோகிவாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்
இந் நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
CATEGORIES World News

