வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைக்கின்றன

வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைக்கின்றன

ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் ஐ.எஸ். குறித்து யாரும் கவனிப்பதில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு போன்றவை இன்றும் நடக்கிறது. இதில் யாரும் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷ்யாவுக்கு எதிரானது என்றால் அவர்களுக்கு எல்லாம் நல்லதாக தெரிகிறது என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெலாரசில் நடந்த யூரேசியன் பொருளாதார ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி புதின், செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”எங்கள் நாட்டில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோதும், பயங்கரவாதம் போன்ற ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கருவியாகவும் இது நடந்தது. நேட்டோ விரிவாக்கம் மற்றும் உக்ரேன் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )