
சின்மயி version முத்தமழை பாடல் வீடியோ வெளியானது
சின்மயி பாடிய முத்தமழை பாடல் வீடியோ வெளியானது.
இது முத்தமழை சின்மயி version ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
‘தக் லைப்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ‘முத்த மழை’ பாடலை திரைப்படத்திற்காக பாடகி தீ பாடியிருந்தார் .
திரைப்பட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடவிருந்த இப்பாடலை, அவர் வர முடியாத காரணத்தால் சின்மயி பாடியபோது அவரது குரலில் ‘முத்த மழை’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது .
இந்த பாடல் உலக டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10ஆம் இடத்தையும், இந்திய டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 8ஆம் இடத்தையும் பிடித்தது , 5 கோடி பார்வைகளை கடந்தது .
ரசிகர்கள் சின்மயி version வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர் .
ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய முத்த மழை பாடல் திரைப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை. ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சில நாள்களுக்கு முன் பாடகி தீ பாடிய பாடலின் வீடியோ வெளியிடபட்டது .
தீ குரலும் திரிஷாவின் நடிப்பும் சரியாகப் பொருந்தாததால் விமர்சிக்கப்பட்டது . ஒரு தரப்பு வரவேற்றது .
இந்த நிலையில், சின்மயி பாடிய வீடியோ பாடலை வெளியானது ஆறுதலளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

