டெக்சாஸ் வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்புகாணாமல் போன 25 சிறுமிகளைதேடும் நடவடிக்கைகள் தீவிரம்

டெக்சாஸ் வெள்ளத்தில் 24 பேர் உயிரிழப்புகாணாமல் போன 25 சிறுமிகளைதேடும் நடவடிக்கைகள் தீவிரம்

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வெள்ளத்தில் சுமார் 25 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

பலத்த மழையினால் குவாடலூப் நதி சுமார் 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்ததுள்ளது .

குவாடலூப் ஆற்றின் கரையில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற பெண்கள் கோடைக்கால முகாமில் கலந்துகொண்ட 750 சிறுமிகள் குழுவில் சுமார் 25 பேர் வரை காணாமல் போயுள்ளதாக டெக்சாஸ் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அப்பகுதியிலுள்ள மரங்களில் அகப்பட்டு உதவி கோ வழியின்றி இருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைக் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .

மீட்பு பணிக்காக 14 ஹெலிகப்டர்களும் 12 ட்ரோன்கள் மற்றும் ஒன்பது மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )