இஷாரா செவ்வந்தியின் தாயார் உயிரிழப்பு

இஷாரா செவ்வந்தியின் தாயார் உயிரிழப்பு

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெள்ளிக்கிழமை (11) வெலிக்கடை சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பெப்ரவரி மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தியே கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய பெண் என அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )