
மீமுரே விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வு
மீமுரே கரபம்கொல்ல பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் , சுற்றுலா சென்ற வேன் ஒன்று இப்பகுதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவிற்கு 30 மீட்டர் செங்குத்தாக உருண்டு கீழ் வளவில் உள்ள பிரதான வீதியில் விழுந்தது .
இந்த விபத்தில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய சிறு குழந்தை ஒன்றும் படுகாயமடைந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
விபத்து ஏற்பட்ட போது குறித்த வேனில் 6 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசவாசிகள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
CATEGORIES Sri Lanka

