சட்டவிரோத கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது

சட்டவிரோத கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது

கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலை, நிலாவெளி, புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளின் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப்மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்துதல் , செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் கடலட்டைகள் மற்றும் சிப்பிகள் கொண்டு செல்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்யதனர்.

16 டிங்கி படகுகளையும், ஐந்து 5 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் இதன்போது கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, ஈச்சிலம்பட்டு, புத்தளம், குச்சவெளி, கோட்பே, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )