
Seat Belt அணிவது கட்டாயம்
ஜூலை 01 முதல் சகல வீதிகளிலும் செல்லும் பஸ்களில் சாரதிகள் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 01 முதல் சகல அதி வேக நெடுஞ்சாலைகளிலும் செல்லும் சொகுசு வாகனங்களில் பின் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகள் இருக்கை பட்டியலில் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 01 முதல் அதி வேக நெடுஞ்சாலைகளில் செல்லும் சகல வாகனங்களிலும் சகல பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

