
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேரும், நெதர்லாந்திலிருந்து 15,556 பேரும், சீனாவிலிருந்து 12,982 பேரும், பிரான்சிலிருந்து 11,059 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

