
களுத்துறையின் பல பகுதிகளுக்கு நாளை 12 மணி நேர நீர் வெட்டு
களுத்துறையின் பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாத்துவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
களுத்துறை நீர் விநியோக அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

