
லிந்துலையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி தோட்டத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்புசல்லாவ எனிக் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அருமைவாசகம் கமலராஜா என்பவரே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் உள்ள கடை ஒன்றில்
தொழில் புரிந்து வந்த குறித்த இளைஞர் நேற்று லிந்துலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்களுடன் லிந்துலை குளத்தில் குளிக்கசென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில் ஏனையவர்கள் அவரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து நேற்று மாலை வேளையில் லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்
பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

