சீதுவையில் ஒருவர் குத்திக் கொலை

சீதுவையில் ஒருவர் குத்திக் கொலை

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரியகஹலிந்த ரயில் பாதைக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத குழுவினரால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இந்தக் கொலைச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஈரியகஹலிந்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )