
சாவகச்சேரி ஹர்த்தால் நிலவரம்
தமிழரசு கட்சியினால் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் இன்றைய தினம் (18) பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி நகரில் மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் இணைந்த கடைத்தொகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளது.

ஏனைய தேங்காய் சந்தை,பழக்கடை,மீன் சந்தை தொகுதிகள் பகுதியளவில் இயங்குவதுடன் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதுடன் அரச,தனியார் பொதுப் போக்குவரத்தும் சீராக இயங்குகின்றது.

பிரதீபன்
CATEGORIES Sri Lanka

