
பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு
பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலையடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

