கர்ப்பம் தரிந்திருந்த புள்ளி மானை வேட்டையாடிய 5 பேர் கைது

கர்ப்பம் தரிந்திருந்த புள்ளி மானை வேட்டையாடிய 5 பேர் கைது

வில்பத்து தேசிய பூங்காவில் நேற்று (28) கர்ப்பம் தரிந்திருந்த புள்ளி மானை வேட்டையாடிய குற்றச்சாட்டில் 05 சந்தேக நபர்கள் வில்பத்டு தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது, வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து நபர் ஒருவர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 12 போர் துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு கத்தி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மின்சார டொர்ச் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறித்த மான் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதாக முதற்கட்டவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )