இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணையும், கூர்மையான ஆயுதத்தால்  பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சந்தேக நபரையும் கைது செய்ய பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.

அதன்படி, றக்வானை, பொதுப்பிட்டிய, கனடகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலகே ஹர்ஷனி பிரியந்திகா என்ற 40 வயதுடைய பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்.

றக்வானை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை 071 859 1394 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

படத்தில் இருக்கும் ஆண், மத்துகம, டோலஹேனவத்தே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணின் கழுத்தை ஏப்ரல் 18 ஆம் திகதி அறுத்த குற்றத்திற்காக தேடப்படும் 41 வயதுடைய பிராமணகே டான் சனத் ரவீந்திர நிலந்த ஆவார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1700 என்ற எண்ணில் மத்துகம உதவி பொலிஸ் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )