
இத்தாலியின் பிரதி அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi),இன்று (03) நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இலங்கையின் பல உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

