இன்று இரண்டாவது நாளாகவும் தொடரும்மின்சார சபை தொழிற்சங்க நடவடிக்கை

இன்று இரண்டாவது நாளாகவும் தொடரும்மின்சார சபை தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பிரிவுகளுக்குட்படுத்துவதற்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, மற்றும் மறுசீரமைப்பு செயல்முறையானது மின்சார திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு அமையவில்லையென தெரிவித்தும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார சபை ஊழியர்களும் இவ்வாறு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் உரிமைகள் உள்ளிட்ட 24 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சருடனும் இது குறித்து கலந்துரையாடியபோதும் சாதகமான பதில் கிடைக்கவில்லை,” என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )