
சம்பத் மனம்பெரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் எம்பிலிப்பிட்டியவில் கண்டுபிடிப்பு
பியால் மனம்பெரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
எம்பிலிப்பிட்டி புதிய நகரில் உள்ள கேரேஜ் ஒன்றில் இந்த கார் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றைய தினத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு குறித்த கராஜிற்கு வந்த ஒருவர், காரை சம்பத் மனம்பெரியிடம் கொடுத்துவிடுமாறு கூறி விட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மூலப்பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான ஹெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
இதேவேளை பியால் மனம்பெரியின் சகோதரர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை தடை செய்ய மொட்டு கட்சி சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.

