
யாழில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18,22,23 வயதுடைய நால்வர் கைது
யாழ்ப்பாணதில் ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் , குருநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 110 மில்லிகிராம் ஹெரோயின், 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 18,22,23 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

