போக்குவரத்து பொலிஸாரின் உடலில் பொருத்தப்படும் கெமராக்கள்

போக்குவரத்து பொலிஸாரின் உடலில் பொருத்தப்படும் கெமராக்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வததும், ஊழலைத் தடுப்பதும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் தவறுகளை மறைப்பதற்காக சில சாரதிகள், போலீஸ் அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் ,அதேவேளை அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தையும் இந்த கெமராக்கள் பதிவு செய்யும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் குறிப்பிட்டுளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )