நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி

நடிகர் ரோபோ சங்கர் நேற்று (18) இரவு காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார்.

‘மாரி’, ‘விசுவாசம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )