
MV X-Press Pearl ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க மறுப்பு
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

