இலங்கையில் நாளொன்றுக்கு 15 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம், தினமும் மூவர் மரணம்  ; வைத்திய நிபுணர் நடராஜா ஜெயகுமாரன்

இலங்கையில் நாளொன்றுக்கு 15 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம், தினமும் மூவர் மரணம் ; வைத்திய நிபுணர் நடராஜா ஜெயகுமாரன்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் மேற்பட்ட புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருதாக மகரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் புற்றுநோய் வைத்திய நிபுணர் நடராஜா ஜெயகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,”நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் அவர்களில் ஒவ்வொரு நாளும் மூவர் உயிரிழக்கின்றனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியவிடயமாகும் .

மார்பகப் புற்றநோய் பெரும் அச்சறுத்தலாக மாறிவருவது குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஊடகம் ஒன்றின் முக்கிய பொறுப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )