தீராத வினைகள் தீர்க்கும் மகாலட்சுமி விரதம்

தீராத வினைகள் தீர்க்கும் மகாலட்சுமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து மேற்கொள்ளப்படும் விரதம் மகாலட்சுமி விரதம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் தீராத வினைகள் தீரும், வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும் என்பது ஐதீகம்.

இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து லட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடவேண்டும்.

மேலும் அவரவர் சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும். இதனால் ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் என அனைத்தும் நீங்கி புது நம்பிக்கை பிறக்கும்.

தேவியின் திருவருளால் வீட்டில் செல்வ கடாட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )