
மொனராகலையில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து இ-சிகரெட்டுகள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது
மொனராகலை நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்த இ-சிகரெட் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மொனராகலை தலைமை பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .
சந்தேக நபர் பல்வேறு விலைகளில் மாணவர்களுக்கு இ-சிகரெட்டுகளை விற்றதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து இ-சிகரெட்டுகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொனராகலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

